பாப நாசம் சிவன் - கமாஸ் - ஆதி
பல்லவி
இடது பதம் தூக்கி ஆடும் நடராஜன் அடி பணிவையே நெஞ்சே
அனுபல்லவி
படவரவு ஆட புலி அதள் ஆட
பக்தர்கள் ஜய ஜய எனவே புலி பதஞ்சலி இரு கண் குளிர
தில்லையிலே (இடது)
சரணம் (திஸ்ர கதி)
திருவடிச் சிலம்புகள் கலீர் கலீர் என
திருமுடி இளமதியொளி பளீர் பளீர் என
(சதுஸ்ர கதி)
திமிதக தரிகிடதோம் என திருமால் மத்தளம் அதிர
சிவகாமி மணாளன் திருச்சிற்றம்பலம் தனிலே புன்னகையொடு
(இடது)
பம்பாய் சகோதரிகள் குரலில் இந்தப் பாடலைக் கேட்டு மகிழ
இங்கே சொடுக்குக.

No comments:
Post a Comment