Monday, December 31, 2012

நாயகனாய் நின்ற நந்தகோப னுடைய

கோயில் காப்பானே! கொடித்தோன்றும் தோரண

வாயில் காப்பானே! மணிக்கதவம் தாள் திறவாய்!

ஆயர் சிறுமிய ரோமுக்கு அறைபறை

மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான்

தூயோமாய் வந்தோம் துயிலெழப் பாடுவான்

வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே அம்மாநீ!

நேய நிலைக்கதவம் நீக்கேலோர் எம்பாவாய்!

Sunday, December 30, 2012

எல்லே! இளங்கிளியே! இன்னம் உறங்குதியோ?

சில்லென்றழையேன் மின் நங்கைமீர் போதர்கின்றேன்

வல்லையுன் கட்டுரைகள் பண்டே உன் வாயறிது ம்

வல்லீர்கள் நீங்களே நானேதான் ஆயிடுக.

ஒல்லை நீ போதாய் உனக்கென்ன வேறுடையை

எல்லாரும் போந்தாரோ போந்தார் போந்தெண்ணிக்கொள்

வல்லானை கொன்றானை மாற்றானை மாற்றழிக்க

வல்லானை மாயனைப் பாடேலொ ரெம்பாவாய்!

Saturday, December 29, 2012

புள்ளின் வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக்

கிள்ளிக் களைந்தானைக் கீர்த்தி மை பாடிப் போய்ப்

பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார்

வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று

புள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய்

குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே

பள்ளிக் கிடத்தியோ. பாவாய். நீ நன் நாளால்

கள்ளம் தவிர்ந்து கலந்தேலோர் எம்பாவாய்.

Friday, December 28, 2012

உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்

செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பினகாண்

செங்கல் பொடிக்கூரை வெண்பல் தவத்தவர்

தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார்

எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்

நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்

சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்

பங்கயக் கண்ணானைப் பாடேலோர் எம்பாவாய்!

Thursday, December 27, 2012

Kopi Luwak, also known as caphe cut chon (fox-dung coffee) in Vietnam and kape alamid in the Philippines, is coffee that is prepared using coffee cherries that have been eaten and partially digested by the Asian palm civet, then harvested from its fecal matter. The civets digest the flesh of the coffee cherries but pass the beans inside, leaving their stomach enzymes to go to work on the beans, which adds to the coffee's prized aroma and flavor.[3] Only around 1,000 pounds (450 kg) of civet coffee make it to the market each year, and 1 pound (0.45 kg) can cost up to $600 in some parts of the world and about $100 a cup in others. A 2012 investigation by the Guardian newspaper found Indonesian civets held separately in cramped cages. The animals were force-fed a debilitating diet of coffee cherries in conditions described by the Traffic charity as "awful" and "horrific". There is a campaign under way to encourage "ethical civet coffee".

திருவாதிரைத் திரு நாள் என்றாலே சிதம்பரத்தை எண்ணாமல் இருக்க முடியுமா ?

ஐந்து சபைகளில் முதன்மையானதாகவும், ஆடல்வல்லானின் அழகு நடனத்தை பதஞ்சலிக்கும் வியாக்கிர பாதருக்கும் காணக் கிடைக்கும்படி செய்த பெருமை உடையதுமான பொன்னம்பலத்தினை எண்ணினாலே எல்லாப் பாவங்களும் தீர்ந்து போகுமே !

பாபம் தீரும் என்றதும் நினைவுக்கு வருவது நடராஜப் பெருமானின் மேல் பாடப்பட்ட இடைக்காலப் பாடல்கள்.

அதிலும் நிந்தாஸ்துதி என்னும் வகையில் சிவபெருமானின் லீலைகளையும், பெருமைகளையும் விளக்கி அதே சமயத்தில் அதை எல்லாம் பாடலில் கூறுகையில் உயர்த்திப் பேசாமல் மட்டம் செய்து கூறுவது போல எழுதும் வகையில் உருவாக்கப்பட்ட பாடல்கள் நினைவுக்கு வருகின்றன.

இவற்றில் நாட்டியம் ஆடுபவர்களும், ரசிகர்களும்  நன்கு அறிந்த பாடலான "நடமாடித் திரிந்த" என்ற காம்போஜி ராகப் பாடல் இனிமையானதும் பிரசித்தமானதும் கூட..

சமீபத்தில் இதன் முழுவடிவமும் வ்லைத்தளத்தில் கிடைக்கப் பெற்றேன். அதை அனைவரும் அறிந்து மகிழ வேண்டும் என்ற எண்ணத்துடன் இங்கு தருகின்றேன்.


பல்லவி

நடமாடித் திரிந்த உமக்கு இடதுகால் உதவாமல்
முடமானதேன் என்று சொல்லுவீரய்யா!

அனுபல்லவி

திடமேவும் தில்லைநகர் மருவு பேரானந்த
சடைவிரித்தாடினவா தேவ சிற்சபை அறிய

(நடமாடித்..)

சரணங்கள்

1.
திருநீறைச் சுமந்தீரோ! நெருப்பான மேனிதனில்
சீதத்தினால் மிகுந்த வாதகுணமோ!
ஒருமையுடன் மார்கண்டர்க்கு உதவியாய் மரலி விழ
உதைக்க சுளிக்கேறியுண்ட குணமோ!
பரவைதன் தெருவாசற்படி இடறிற்றோ, எந்தன்
பாவமோ, என் சிவனே, மூவர்க்கும் முதல்வன் என்று

(நடமாடித்..)

2.
தனஞ்செய மஹிபனுடன் சமரில் அடிபட்டு விழ
சந்திலே முடி பிசகி நொந்ததுவோ?
இனம் புரியும் தாருகா வனமெங்கும் திரிந்ததில்
முள்ளேறுண்டதோ சொல்லும்? -- முறிந்ததுவோ?
கனகசபை தனில் நடனம் கண்டோர்கள் அதிசயிக்க
கண்ணெண்றுண்டதோ சொல்லும்?
விண்ணவர்க்கும் முதல்வன் என்று

(நடமாடித்..)

3.
பக்தி செய்யும் பெரியோர்கள் பாபநாசமாகும்
பரமபதம் இதுவென்று தூக்கி நின்றதுவோ?
சக்தி சிவகாமவல்லி தன்பாதம் நோகுமென்றே
தரையில் அடிவைக்க தயங்கி நின்றதுவோ?
சத்யலோக அதிபதி தாளத்திற்கேற்ப நடம்
தாங்கியே ஒரு காலைத் தூக்கி நின்றதுவோ?

(நடமாடித்..)

இப்பாடலை இயற்றியவர் கோபாலகிருஷ்ண பாரதி என்றும் மாரிமுத்தா பிள்ளை என்றும் பல இடங்களில் கண்டதுண்டு. ஆனால் இது பாபநாசம் முதலியார் அவர்களால் இயற்ற்பபட்டது என்று சொல்லப் படுகிறது.


பாப நாசம் சிவன் - கமாஸ் - ஆதி 

பல்லவி

இடது பதம் தூக்கி ஆடும் நடராஜன் அடி பணிவையே நெஞ்சே

அனுபல்லவி

படவரவு ஆட புலி அதள் ஆட
பக்தர்கள் ஜய ஜய எனவே புலி பதஞ்சலி இரு கண் குளிர
தில்லையிலே (இடது)

  சரணம் (திஸ்ர கதி)

திருவடிச் சிலம்புகள் கலீர் கலீர் என
திருமுடி இளமதியொளி பளீர் பளீர் என

(சதுஸ்ர கதி)
திமிதக தரிகிடதோம் என திருமால் மத்தளம் அதிர
சிவகாமி மணாளன் திருச்சிற்றம்பலம் தனிலே புன்னகையொடு

 (இடது)


பம்பாய் சகோதரிகள் குரலில் இந்தப் பாடலைக் கேட்டு மகிழ
இங்கே சொடுக்குக.

கனைத்து இளம் கற்றெருமை கன்றுக்கு இரங்கி

நினைத்து முலை வழியே நின்று பால்சோர

நனைத்து இல்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்

பனித்தலை வீழநின் வாசற்கடை பற்றிச்

சினத்தினால் தென்இலங்கைக் கோமானைச் செற்ற

மனத்துக்கு இனியானைப் பாடவும்நீ வாய் திறவாய்

இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேர்உறக்கம் ?

அனைத்து இல்லத்தாரும் அறிந்தேலோர் எம்பாவாய்.

Wednesday, December 26, 2012

கற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்து

செற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும்

குற்றம் ஒன்றில்லாத கோவலர்த்தம் பொற்கொடியே!

புற்றுஅரவு அல்குல் புனமயிலே! போதராய்

சுற்றத்து தோழிமார் எல்லாரும் வந்து நின்

முற்றம் புகுந்து முகில் வண்ணன் பேர்பாட

சிற்றாதே பேசாதே செல்வ பெண்டாட்டி! நீ

எற்றுக்கு உறங்கும் பொருளேலோர் எம்பாவாய்.

Tuesday, December 25, 2012

நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!

மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்

நாற்றத் துழாய்முடி நாரா யணன்நம்மால்

போற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டொருநாள்

கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்ப கரணனும்

தோற்றும் உனக்கே பெருந்துயில்தான் தந்தானோ

ஆற்ற அனந்த லுடையாய் அருங்கலமே

தேற்றமாய் வந்து திறவேலோ ரெம்பாவாய்.

Monday, December 24, 2012

தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய

தூபம் கமழ துயிலணைமேல் கண்வளரும்

மாமான் மகளே! மணிக்கதவம் தாள்திறவாய்;

மாமீர் அவளை எழுப்பீரோ? உன் மகள்தான்

ஊமையோ? அன்றி செவிடோ அனந்தலோ?

ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ?

மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று

நாமம் பலவும் நவின்றேலோ ரெம்பாவாய்!

Sunday, December 23, 2012

கீழ்வானம் வெள்ளென்று, எருமை சிறுவீடு

மேய்வான் பரந்தனகாண்; மிக்குள்ள பிள்ளைகளும்

போவான் போகின்றாரைப் போகாமல் காத்துன்னைக்

கூவுவான் வந்து நின்றோம், கோதுகலமுடைய

பாவாய்! எழுந்திராய்; பாடிப் பறைகொண்டு

மாவாய் பிளந்தானை, மல்லரை மாட்டிய

தேவாதி தேவனைச் சென்றுநாம் சேவித்தால்

ஆவாவென் றாராய்ந் தருளேலோ ரெம்பாவாய்.

Saturday, December 22, 2012

கீசு கீசென்று எங்கும் ஆனைச் சாத்தன் கலந்து

பேசின பேச்சரவம் கேட்டிலையோ ! பேயப் பெண்ணே !

காசும் பிறப்பும் கலகலப்பக் கை பேர்த்து

வாச நறும் குழல் ஆய்ச்சியர் மத்தினால்

ஓசை படுத்த தயிரரவம் கேட்டிலையோ !

நாயகப் பெண் பிள்ளாய் நாராயணன் மூர்த்தி

கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ !

தேசமுடையாய் திறவேலோர் எம்பாவாய் !

Friday, December 21, 2012

புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில்

வெள்ளை விளி சங்கின் பேரரவம் கேட்டிலையோ

பிள்ளாய் எழுந்திராய் பேய் முலை நஞ்சுண்டு

கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி

வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினை

உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்

மெள்ள எழுந்து அரி என்ற பேரரவம்

உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்

Thursday, December 20, 2012

மாயனை மன்னு வட மதுரை மைந்தனை

தூய பெரு நீர் யமுனைத் துறைவனை

ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கை

தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனை

தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித் தொழுது

வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க

 போய பிழையும் புகுதருவான் நின்றனவும்

தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்.

Wednesday, December 19, 2012

ஆழி மழைக் கண்ணா! ஒன்று நீ கைகரவேல்

ஆழியுள் புக்கு முகந்து கொடு ஆர்த்தேறி

ஊழி முதல்வ னுருவம் போல் மெய் கருத்து

பாழியந் தோளுடை பத்பநாபன் கையில்

ஆழி போல் மின்னி வலம்புரி போல் நின்றதிர்ந்து

தாழாதே சார்ங்க முதைத்த சரமழை போல்

வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்

மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்

Tuesday, December 18, 2012

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி

நாங்கள் நம்பாவைக்குச் சாற்றி நீராடினால்,

தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து,

ஓங்கு பெருஞ் செந்நெல் ஊடுகயல் உகள,

பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப,

தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி

வாங்கக்குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்

நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய்!

Monday, December 17, 2012

வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்கு

செய்யும் கிரிசைகள் கேளீரோ! பாற்கடலுள்

பையத் துயின்ற பரமனடி பாடி

நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி

மையிட்டெழுதோம் மலரிட்டு நாம் முடியோம்

செயயாதன செய்யோம் தீக்குறளைச் சென்றோதோம்

ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி

உய்யுமாறெண்ணி உகந்தேலோ ரெம்பாவாய்! !!

Sunday, December 16, 2012

மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்

 நீராடப் போதுவீர் ! போதுமினோ நேரிழையீர் !

 சீர்மல்கும் ஆய்ப்பாடி செல்வச் சிறுமீர்காள் !

 கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்

 ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்

 கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்

 நாராயணனே நமக்கே பறை தருவான் !

 பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய் !!