Saturday, November 14, 2015

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாமம்




1. ஸுக்லாம் பரதரம் விஷ்ணும் ஸஸிவர்ணம் சதுர் புஜம்
ப்ரஸந்ந வதநம் த்யாயேத் ஸர்வ விக்நோப ஸாந்தயே

2. யஸ்ய த்விரத வக்த்ராத்யா : பாரிஷத்யா : பரஸ்ஸதம்
விக்நம் நிக்நந்தி ஸததம் விஷ்வக்ஸேநம் தமாஸ்ரயே

3. வ்யாஸம் வஸிஷ்ட நப்தாரம் ஸக்தே :பௌத்ர மகல்மஷம்
பராஸராத்மஜம் வந்தே சுக தாதம் தபோ நிதிம்

4. வ்யாஸாய விஷ்ணு ரூபாய வ்யாஸ ரூபாய விஷ்ணுவே
நமோ வை ப்ரஹ்ம நிதயே வாஸிஷ்டாய நமோ நம:

5. அவிகாராய ஸுத்தாய நித்யாய பரமாத்மநே
ஸதைக ரூபரூபாய விஷ்ணவே ஸர்வ ஜிஷ்ணவே

6. யஸ்ய ஸ்மரண மாத்ரேண ஜன்ம ஸம்ஸார பந்தநாத்
விமுச்யதே நமஸ் தஸ்மை விஷ்ணுவே ப்ரப விஷ்ணவே


ஓம் நமோ விஷ்ணவே ப்ரப விஷ்ணவே

ஸ்ரீ வைஸம்பாயந உவாச...


1. ஸ்ருத்வா தர்மா நஸேஷேண பாவநாநி ச ஸர்வஸ:
யுதிஷ்டிர : ஸாந்த நவம் புநரே வாப்ய பாஷத

யுதிஷ்டிர உவாச...


2. கிமேகம் தைவதம் லோகே கிம் வாப்யேகம் பராயணம்
ஸ்துவந்த : கம் கமர்ச்சந்த : ப்ராப்நுயுர் வாநவஸ ஸுபம்

3. கோ தர்ம: ஸர்வ தர்மாணாம் பவத: பரமோ மத:
கிம் ஜபந் முச்யதே ஐந்துர் ஐந்ம ஸம்ஸார பந்தநாத்

ஸ்ரீ பீஷ்ம உவாச -

4. ஜகத் ப்ரபும் தேவ தேவம் அநந்தம் புருஷாத்தமம்
ஸ்துவந் நாம ஸஹஸ்ரேண புருஷ: ஸததோத்தித:

5. தமேவ சார்ச்சயந் நித்யம் பக்த்யா புருஷ மவ்யயம்
த்யாயந் ஸ்துவந்ந மஸ்யம்ஸ் யஜமா நஸ் தமேவ ச

6. அநாதி நிதநம் விஷ்ணும் ஸர்வ லோக மஹேஸ்வரம்
லோகாத்யக்ஷம் ஸ்துவந் நித்யம் ஸர்வ துக்காதிகோ பவேத்

7. ப்ரஹ்மண்யம் ஸர்வ தர்மஜ்ஞம் லோகாநாம் கீர்த்தி வர்த்த நம்
லோக நாதம் மஹத்பூதம் ஸர்வபூத பவோத்பவம்

8. ஏஷ மே ஸர்வ தர்மாணாம் தர்மோ திகதமோ மத:
யத் பக்த்யா  புண்டரீகாக்ஷம் ஸ்தவை ரர்ச்சைந் நர: ஸதா

9. பரமம் யோ மஹத்தேஜ: பரமம் யோ மஹத்தப:
பரமம் யோ மஹத்ப்ரஹ்ம பரமம் ய: பராயணம்

10. பவித்ராணாம் பவித்ரம் யோ மங்களாநாம் ச மங்களம்
தைவதம் தேவதாநாம் ச பூதாநாம் யோவ்யய: பிதா

11. யத: ஸர்வாணி பூதாநி பவந்த்யாதி யுகாகமே
யஸ்மிம்ஸ்ச ப்ரளயம் யாந்தி புநரேவ் யுக க்ஷயே

12. தஸ்ய லோக ப்ரதா நஸ்ய ஜகந் நாதஸ்ய பூபதே
விஷ்ணோர் நாம ஸஹஸ்ரம் மே ஸ்ருணு பாப பயாபஹம்

13. யாநி நாமாநி கௌணாநி விக்யாதாநி மஹாத்மந:
ரிஷிபி: பரிகீதாநி தாநி வக்ஷ்யாமி பூதயே

ரிஷிர் நாம் ஸஹஸ்ரஸ்ய வேத வ்யாஸோ மஹாந் ரிஷி:
சந்தோ அநுஷ்டுப் ததா தேவோ பகவாந் தேவகீ ஸுத:

அம்ருதாம் ஸுத்பவோ பீஜம் ஸக்திர் தேவகி நந்தந:
த்ரிஸாமா ஹ்ருதயம் தஸ்ய ஸாந்த்யர்த்தே விநி யுஜ்யதே

விஷ்ணும் ஜிஷ்ணும் மஹாவிஷ்ணும் ப்ரபவிஷ்ணும் மஹேஸ்வரம்
அநேக ரூப தைத்யாந்தம் நமாமி புருஷாத்தமம்

அஸ்ய ஸ்ரீ விஷ்ணோர் திவ்ய ஸஹஸ்ரநாம ஸ்தோத்ர மஹா மந்த்ரஸ்ய
ஸ்ரீ வேத வ்யாஸோ பகவாந் ரிஷி: அநுஷ்டுப் சந்த:
ஸ்ரீ மஹாவிஷ்ணு: பரமாத்மா ஸ்ரீமந் நாராயணோ தேவதா

அம்ருதாம் ஸுத்பவோ பாநுரிதி பீஜம்;
தேவகீ நந்தந: ஸ்ரேஷ்டேதி ஸக்தி;;
உத்பவ; க்ஷபணோ தேவ இதி பரமோ மந்த்ர;;
சங்க ப்ருந் நந்த்கீ சக்ரீ தி கீலகம்;
சார்ங்க தந்வா கதாதர இத்யஸ்த்ரம்
ரதாங்க பாணி ரக்ஷப்ய இதி நேத்ரம்;
த்ரிஸாமா ஸாமக: ஸாமேதி கவசம்;;
ஆநந்தம் பர ப்ரஹ்மேதி யோநி;;
ருது: சு தர்ஸந: கால இதி திக்பந்த;;
ஸ்ரீ விஸ்வரூப இதி த்யாநம்;
ஸ்ரீமஹாவிஷ்ணு ப்ரீத்யர்தே ஸ்ரீ ஸஹஸ்ரநாம ஜபே விநியோக;

த்யாநம்

1. க்ஷீரோ தந்வ ப்ரதேஸே ஸுசிமணி விலஸத் ஸைகதே மௌக்தி காநாம்
மாலா க்லுப்தா ஸநஸ்த : ஸ்படிக மணிநிபைர் மௌக்திகைர் மண்டிதாங்க:
கப்ரை ரப்ரை ரதப்ரை ருபரி விரசிதைர் முக்த பீயூஷ வர்ஷை:
ஆநந்தீ ந : புநீயா தரிநளிந கதா ஸங்க பாணிர் முகுந்த :

2. பூ : பாதௌ யஸ்ய நாபிர் வியத சுரநிலஸ் சந்த்ர ஸுர்யௌச நேத்ரே
கர்ணா வாஸா : ஸிரோ த்யௌர் முகமபி தஹநோ யஸ்ய வாஸ்தேய மப்தி:
அந்தஸ்தம் யஸ்ய விஸ்வம் ஸுர நர ககோ போகி கந்தர்வ தைத்யை:
சித்ரம் ரம்ரம் யதே தம் த்ரிபுவந வபுஷம் விஷ்ணு மீஸம் நமாமி

3. ஸாந்தா காரம் புஜக ஸயநம் பத்மநாபம் சுரேஸம்
விஸ்வாதாரம் ககந ஸத்ருஸம் மேக வர்ணம் சுபாங்கம்
லக்ஷ்மீ காந்தம் கமல நயநம் யோகி ஹ்ருத் த்யாந கம்யம்
வந்தே விஷ்ணும் பவபய ஹரம் ஸர்வ லோகைக நாதம்

4. மேக ஸ்யாமம் பீத கௌஸேய வாஸம்
ஸ்ரீவத்ஸாங்கம் கௌஸ்துபோத் பாஸிதாங்கம்
புண்யோபேதம் புண்டரீ காய தாக்ஷம்
விஷ்ணும் வந்தே ஸர்வ லோகைக நாதம்

5. ஸசங்க சக்ரம் ஸகிரீட குண்டலம்
ஸபீத வஸ்த்ரம் ஸரஸீரு ஹேக்ஷணம்
ஸஹார வக்ஷஸ் ஸ்தல ஷிபி கௌஸ்துபம்
நமாமி விஷ்ணும் ஸிரஸா சதுர்புஜம்

சாயாயாம் பாரி ஜாதஸ்ய ஹேம ஸிம்ஹாஸநோ பரி
ஆஸீந மம்புதஸ் யாமம், ஆயதாக்ஷ மலங்க்ருதம்

சந்த்ராநநம் சதுர்பாஹும் ஸ்ரீவத்ஸாங்கித வக்ஷஸம்
ருக்மிணீ ஸத்ய பாமாப்யாம் ஸஹிதம் க்ருஷ்ண மாஸ்ரயே

ஸஹஸ்ர நாம ப்ராரம்ப :

1. ஓம் விஸ்வம் விஷ்ணுர் வஷட்காரோ பூதபவ்ய பவத்ப்ரபு:
பூத க்ருத்பூத ப்ருத் பாவோ பூதாத்மா பூதபாவந:

2. பூதாத்மா பரமாத்மா ச முக்தாநாம் பரமா கதி :
அவ்யய : புருஷஸ் ஸாக்ஷீ க்ஷத்ரஜ்ஞோ அக்ஷர ஏவ ச

3. யோகோ யோகவிதாம் நேதா ப்ரதாந புருஷேஸ்வர:
நாரஸிம்ஹ வபுஸ் ஸ்ரீ மாந் கேஸவ : புருக்ஷத்தம:

4. ஸர்வஸ் ஸர்வஸ் சிவஸ் தாணுர் பூதாதிர் நிதி ரவ்யய:
ஸம்பவோ பாவநோ பர்த்தா ப்ரபவ: ப்ரபுரீஸ்வர:

5. ஸ்வயம்பூஸ் ஸம்பு ராதித்ய : புஷ்கராக்ஷ மஹாஸ்வந :
அநாதி நிதநோ தாதா விதாதா தாது ருத்தம:

6. அப்ரமேயோ ஹ்ருஷீகேஸ : பத்மநாபோ அமரப்ரபு :
விஸ்வகர்மா மநுஸ் த்வஷ்டா ஸ்தவிஷ்டஸ் ஸ்தவிரோ த்ருவ :

7. அக்ராஹ்யஸ் ஸாஸ்வத: க்ருஷ்ணோ லோஹிதாக்ஷ : பிப்ரதர்தந:
ப்ரபூதஸ் த்ரிககுப்தாம பவித்ரம் மங்களம் பரம்

8. ஈஸாந : ப்ராணத : ப்ராணோ ஜ்யேஷ்ட ஸ்ரேஷ்ட : ப்ரஜாபதி :
ஹிரண்ய கர்ப்போ பூகர்ப்போ மாதவோ மதுஸுதந :

9. ஈஸ்வரோ விக்ரமீ தந்வீ மேதாவீ விக்ரம : க்ரம :
அநுத்தமோ துராதர்ஷ : க்ருதஞ : க்ருதி ராத்மவாந்

10. சுரேஸஸ் ஸரணம் ஸர்ம விஸ்வரேதா : ப்ரஜாபவ :
அஹஸ் ஸம்வத்ஸரோ வ்யாள: ப்ரத்யயஸ் ஸர்வ தர்ஸன:

11. அஜஸ் ஸர்வேஸ்வரஸ் ஸித்தஸ் ஸித்திஸ் ஸர்வாதி ரச்யுத :
வ்ருஷா கபிரமேயாத்மா ஸர்வ யோக விநிஸ்ருத :

12. வஸுர் வஸுமநாஸ் ஸத்யஸ் ஸமாத்மா ஸம்மிதஸ் ஸம :
அமோக : புண்டரீகாக்ஷ வ்ருஷகர்மா வ்ருஷா க்ருதி :

13. ருத்ரோ பஹுஸிரா பப்ருர் விஸ்வ யோநிஸ் சுசிஸ்ரவா :
அம்ருத்ஸ் ஸாஸ்வதஸ் ஸ்தாணுர் வரா ரோஹோ மஹாதபா :

14. ஸர்வகஸ் ஸர்வவித் பாநுர் விஷ்வக்ஸேநோ ஜநார்தந:
வேதோ வேத விதவ்யங்கோ வேதாங்கோ வேதவித் கவி:

15. லோகாத்யக்ஷஸ் ஸுராத்யக்ஷ தர்மாத்யக்ஷ : க்ருதாக்ருத :
சதுராத்மா சதுர் வ்யூஹஸ் சதுர் தம்ஷ்ட்ரஸ் சதுர்புஜ:

16. ப்ராஜிஷ்ணுர் போஜநம் போக்தா ஸஹிஷ்ணுர் ஜகதாதிஜ:
அநகோ விஜயோ ஜேதா விஸ்வயோநி : புநர்வஸு

17. உபேந்த்ரோ வாமந: ப்ராம்சு : அமோகஸ் சுசிரூர்ஜித:
அதீந்த்ரஸ் ஸங்க்ரஹஸ் ஸர்கோ த்ருதாத்மா நியமோ யம:

18. வேத்யோ வைத்யஸ் ஸதாயோகீ வீரஹா மாதவோ மது:
அதீந்த்ரியோ மஹாமாயோ மஹோத் ஸாஹோ மஹாபல:

19. மஹாபுத்திர் மஹாவீர்யோ மஹாஸக்திர் மஹாத்யுதி:
அநிர்தேஸ்ய வபு: ஸ்ரீ மாந் அமேயாத்மா மஹா அத்ரித்ருக்

20. மஹேஷ் வாஸோ மஹீ பர்த்தா ஸ்ரீநிவாஸஸ் ஸதாம்பதி:
அநிருத்தஸ் சுரா நந்தோ கோவிந்தோ கோவிதாம் பதி:

21. மரீசிர் தமநோ ஹம்ஸஸ் ஸுபர்ணோ புஜகோத்தம:
ஹிரண்ய நாபஸ் சுதபா : பத்மநாப : ப்ரஜாபதி:

22. அம்ருத்யுஸ் ஸர்வத்ருக் ஸிம்ஹஸ் ஸந்தாதா ஸந்திமாந் ஸ்திர:
அஜோ துர்மர்ஷணஸ் ஸாஸ்தா விஸ்ருதாத்மா சுராரிஹா

23. குருர் குருதமோ தாம ஸத்யஸ் ஸத்ய பராக்ரம:
நிமிஷா அநிமிஷஸ் ஸ்ரக்வீ வாசஸ்பதி ருதாரதீ :

24. அக்ரணீர் க்ராமணீ : ஸ்ரீமாந் ந்யாயோ நேதா ஸமீரண:
ஸஹஸ்ரமூர்த்தா விஸ்வாத்மா ஸஹஸ்ராக்ஷஸ் ஸஹஸ்ரபாத்

25. ஆவர்த்தநோ நிவ்ருத் தாத்மா ஸம்வ்ருதஸ் ஸம்ப்ர மர்தந:
அஹஸ் ஸம்வர்த்தகோ வஹ்நி ரநிலோ தரணீ தர:

26. சுப்ரஸாத : ப்ரஸந்நாத்மா விஸ்வத்ருக் விஸ்வபுக் விபு:
ஸத்கர்த்தா ஸத்க்ருதஸ் ஸாதுர் ஜஹ்நுர் நாராய்ணோ நர:

27. அஸங்க்யேயோ அப்ர மேயாத்மா விஸிஷ்ட ஸ்ஸிஷ்டக்ருச் சுசி:
ஸித்தார்த்தஸ் ஸித்த ஸங்கல்பஸ் ஸித்திதஸ் ஸித்தி ஸாதந:

28. வ்ருஷாஹீ வ்ருஷபோ விஷ்ணுர் வ்ருஷபர்வா வ்ருஷாதர :
வர்த்தநோ வர்த்த மாநஸ்ச விவிக்தஸ் ஸ்ருதி ஸாகர:

29. கபுஜோ துர்த்தரோ வாக்மீ மஹேந்த்ரோ வஸுதோ வஸுநைக
ரூபோ ப்ருஹத் ரூபஸ் ஸிபிவிஷ்ட : ப்ரகாஸந:

30. ஓஜஸ் தேஜோ த்யுதிதர: ப்ரகாஸாத்மா ப்ரதாபந:
ருத்தஸ் ஸ்பஷ்டாக்ஷரோ மந்த்ரஸ் சந்த்ராம்ஸுர் பாஸ்கர த்யுதி:

31. அம்ருதாம் ஸுத்பவோ பாநு: ஸஸ பிந்துஸ் சுரேஸ்வர:
ஒளஷதம் ஜகதஸ் ஸேதுஸ் ஸத்ய தர்ம பராக்ரம:

32. பூதபவ்ய பவந்நாத : பவந : பாவநோ அநல:
காமஹா காம க்ருத் காந்த : காம : காம ப்ரத ப்ரபு :

33. யுகாதி க்ருத் யுகா வர்த்தோ நைக மாயோ மஹாஸந:
அத்ருஸ்யோ அவ்யக்த ரூபஸ்ச ஸஹஸ்ர ஜித நந்தஜித்

34. இஷ்டோவிஸிஷ்டஸ் ஸிஷ்டேஷ்ட : ஸிகண்டீ நகுஷா வ்ருஷ
க்ரோதஹா க்ரோத க்ருத் கர்த்தா விஸ்வ பாஹுர் மஹீதர:

35. அச்யுத: ப்ரதித :ப்ராண: ப்ராணதோ வாஸவாநுஜ:
அபாந்நிதி ரதிஷ்டாந மப்ரமத்த : ப்ரதிஷ்டித :

36. ஸ்கந்தஸ் ஸ்கந்ததரோ துர்யோ வரதோ வாயு வாஹந:
வாசுதேவோ ப்ருஹத் பாநு ராதிதேவ : புரந்தர:

37. அஸோகஸ் தாரணஸ் தாரஸ் ஸுரஸ் ஸெளரிர் ஜநேஸ்வர:
அநுகூலஸ் ஸதாவர்த்த : பத்மீ பத்ம நிபேக்ஷண:

38. பத்ம நாபோ அரவிந்தாக்ஷ : பத்ம கர்ப்பஸ் ஸரீரப்ருத்
மஹர்திர் ருத்தோ வ்ருத்தாத்மா மஹாக்ஷ கருட த்வஜ:

39. அதுலஸ் ஸரபோ பீமஸ் ஸமயஜ்ஞோ ஹவிர் ஹரி:
ஸர்வ லக்ஷண லக்ஷண்யோ லக்ஷ்மீவாந் ஸமிதிஞ் ஜய:

40. விக்ஷரோ ரோஹிதோ மார்கோ ஹேதுர் தாமோதரஸ் ஸஹ:
மஹீதரோ மஹாபாகோ வேகவாந் அமிதாஸந:

41. உத்பவ : க்ஷபணோ தேவஸ் ஸ்ரீகர்ப்ப : பரமேஸ்வர:
கரணம் காரணம் கர்த்தா விகர்த்தா கஹநோ குஹ:

42. வ்யவஸாயோ வ்யவஸ் தாநஸ் ஸம்ஸ்தாநஸ் ஸ்தாநதோ த்ருவ:
பரர்த்தி : பரம ஸ்பஷ்டஸ் துஷ்ட : புஷ்டஸ் சுபேக்ஷண:

43. ராமோ விராமோ விரதோ மார்கோ நேயோ நயோநய:
வீரஸ் ஸக்திமதாம் ஸ்ரேஷ்டோ தர்மோ தர்ம விதுத்தம:

44. வைகுண்ட : புருஷ ப்ராண : ப்ராணத : ப்ரணவ :ப்ருது:
ஹிரண்யகர்ப்பஸ் ஸத்ருக்நோ வ்யாப்தோ வாயுரதோக்ஷஜ:

45. ருதுஸ் சுதர்ஸந : கால : பரமேஷ்டீ பரிக்ரஹ :
உக்ரஸ் ஸம்வத்ஸரோ தக்ஷ விஸ்ராமோ விஸ்வ தக்ஷிண:

46. விஸ்தாரஸ் ஸ்தாவர ஸ்தாணு : ப்ரமாணம் பீஜமவ்யயம்
அர்த்தோ அநர்த்தோ மஹாகோஸோ மஹாபோகோ மஹாதந:

47. அநிர் விண்ணஸ் ஸ்தவிஷ்டோ பூர் தர்ம யூபோ மஹாமக:
ந க்ஷத்ர நேமிர் ந க்ஷத்ரீ க்ஷம: க்ஷமஸ் ஸமீஹந:

48. யஜ்ஞ இஜ்யோ மஹேஜ்யஸ்ச க்ரதுஸ் ஸத்ரம் ஸதாம் கதி:
ஸர்வதர்ஸீ நிவ்ருத்தாத்மா ஸர்வஜ்ஞோ ஜ்ஞாந முத்தமம்

49. சுவ்ரதஸ் சுமுகஸ் ஸூக்ஷ்மஸ் சுகோஷஸ் சுகதஸ் சுஹ்ருத் :
மநோ ஹரோ ஜித க்ரோதோ வீரபாஹுர் விதாரண:

50. ஸ்வாபந: ஸ்வவஸோ வ்யாபீ நைகாத்மா நைக கர்மக்ருத்:
வத்ஸரோ வத்ஸலோ வத்ஸீ ரத்ந கர்ப்போ தநேஸ்வர:

51. தர்மகுப் தர்மக்ருத் தர்மீ ஸதஸத் க்ஷர மக்ஷரம்
அவிஜ்ஞாதா ஸஹஸ்ராம்ஸுர் விதாதா க்ருத லக்ஷண:

52. கபஸ்தி நேமிஸ் ஸத்வஸ்தஸ் ஸிம்ஹோ பூத மஹேஸ்வர:
ஆதி தேவோ மஹாதேவோ தேவேஸோ தேவப்ருத் குரு:

53. உத்தரோ கோபதிர் கோப்தா ஞாந கம்ய : புராதந:
ஸரீரபூத ப்ருத் போக்தா கபீந்த்ரோ பூரி தக்ஷிண:

54. ஸோமபோ அம்ருதபஸ் ஸோம : புருஜித் புருஸத்தம :
விநயோ ஜயஸ் ஸத்ய ஸந்தோ தாஸார்ஹஸ் ஸாத்வதாம் பதி

55. ஜீவோ விநயிதா ஸாக்ஷீ முகுந்தோ அமித விக்ரம:
அம்போநிதிர் அநந்தாத்மா மஹோ ததிஸயோ அந்தக:

56. அஜோ மஹார்ஹ ஸ்வாபாவ்யோ ஜிதா மித்ர: ப்ரமோதந:
ஆநந்தோ நந்தநோ நந்தஸ் ஸத்ய தர்மா த்ரிவிக்ரம :

57. மஹர்ஷி : கபிலாசார்ய : க்ருதஜ்ஞோ மேதிநீ பதி:
த்ரிபதஸ் த்ரிதஸாத் யக்ஷ மஹா ஸ்ருங்க : க்ருதாந்த க்ருத்

58. மஹா வராஹோ கோவிந்தஸ் சுஷேண : கநகாங் கதீ
குஹ்யோ கபீரோ கஹநோ குப்தஸ் சக்ர கதாதர:

59. வேதாஸ்ஸ்வாங்கோ ஜித: க்ருஷ்ணோத்ருடஸ் ஸங்கர்ஷணோ அச்யுத:
வருணோ வாருணோ வ்ருக்ஷ :புஷ்கராக்ஷ மஹாமநா :

60. பகவாந் பகஹா நந்தீ வநமாலீ ஹலாயுத:
ஆதித்யோ ஜ்யோதி ராதித்யஸ் ஸ்ஹிஷ்ணுர் கதி ஸத்தம:

61. சுதந்வா கண்ட பரசுர் தாருணோ த்ரவிண ப்ரத:
திவஸ்ப்ருக் க்ருச்சமஸ் வ்யாஸோ வாசஸ்பதி ரயோநிஜ:

62. த்ரிஸாமா ஸாமகஸ் ஸாம நிர்வாணம் பேஷஜம் பிஷக்:
ஸந்யாஸ க்ருச்சமஸ் ஸாந்தோ நிஷ்டா ஸாந்தி : பராயணம்

63. சுபாங்கஸ் ஸாந்திதஸ் ஸ்ரஷ்டா குமுத : குவலேஸய :
கோஹிதோ கோபதிர் கோப்தா வ்ருஷபாக்ஷ வ்ருஷ ப்ரிய:

64. அநிவர்த்தீ நிவ்ருத் தாத்மா ஸம்க்ஷப்தா க்ஷம க்ருச்சிவ:
ஸ்ரீ வத்ஸ வக்ஷஸ் ஸ்ரீவாஸ : ஸ்ரீபதிஸ் ஸ்ரீமதாம்வர:

65. ஸ்ரீதஸ் ஸ்ரீஸஸ் ஸ்ரீநிவாஸஸ் ஸ்ரீ நிதிஸ் ஸ்ரீவிபாவந:
ஸ்ரீதரஸ் ஸ்ரீகரஸ் ஸ்ரேயஸ் ஸ்ரீமாந் லோக த்ரயாஸ்ரய:

66. ஸ்வக்ஷஸ் ஸ்வங்கஸ் ஸதாநந்தோ நந்திர் ஜ்யோதிர் கணேஸ்வர:
விஜிதாத்மா விதேயாத்மா ஸத்கீர்த்திஸ் சிந்ந ஸம்ஸய:

67. உதீர்ணஸ் ஸர்வதஸ் சக்ஷúர் அநீஸஸ் ஸாஸ்வத ஸ்திர:
பூஷயோ பூஷணோ பூதி ரசோகஸ் சோகநாஸந :

68. அர்ச்சிஷ்மா நர்ச்சித : கும்போ விசுத்தாத்மா விஸோதந:
அநிருத்தோ அப்ரதிரத : ப்ரத்யும்நோ அமித விக்ரம :

69. கால நேமிநிஹா வீர ஸெளரிஸ் ஸுர ஜநேஸ்வர:
த்ரிலோகாத்மா த்ரிலோகேஸ : கேஸவ : கேஸிஹா ஹரி:

70. காமதேவ : காமபால : காமீ காந்த: க்ருதாகம :
அநிர் தேஸ்ய வபுர் விஷ்ணுர் வீரோ அநந்தோ தநஞ்ஜய :

71. ப்ரஹ்மண்யோ ப்ரஹ்மக்ருத் ப்ரஹ்மா ப்ரஹ்ம ப்ரஹ்ம விவர்த்தந :
பரஹ்மவித் ப்ராஹ்மணோ ப்ரஹ்மீ ப்ரஹ்மஞோ ப்ராஹ்மண ப்ரிய:

72. மஹா க்ரமோ மஹா கர்மா மஹா தேஜா மஹோரக:
மஹா க்ரதுர் மஹா யஜ்வா மஹா யஜ்ஞோ மஹா ஹவி:

73. ஸ்தவ்யஸ் ஸ்தவப்ரியஸ் ஸ்தோத்ரம் ஸ்துதிஸ் ஸ்தோதா ரணப்ரிய:
பூர்ண: பூரயிதா புண்ய: புண்ய கீர்த்தி ரநாமய:

74. மநோ ஜவஸ் தீர்த்த கரோ வசு ரேதா வசு ப்ரத:
வசுப்ரதோ வாஸுதேவோ வஸுர் வசுமநாஹவி:

75. ஸத்கதிஸ் ஸத் க்ருதிஸ் ஸத்தா ஸத் பூதிஸ் ஸத் பராயண:
ஸூர ஸேநோ யது ஸ்ரேஷ்டஸ் ஸந்நிவாஸஸ் கயாமுந :

76. பூதா வாஸோ வாசுதேவஸ் ஸர்வாசு நிலயோ அநல :
தர்ப்பஹா தர்ப்பதோ அத்ருப்தோ துர்தரோ அதா அபராஜித:

77. விஸ்வ மூர்த்திர் மஹா மூர்த்திர் தீப்த மூர்த்திர் அமூர்த்திமாந்
அநேக மூர்த்தி ரவ்யக்தஸ் ஸத மூர்த்திஸ் ஸதாநந:

78. ஏகோ நைகஸ் ஸவ : க : கிம் யத்தத் பத மநுத்தமம்
லோக பந்துர் லோக நாதோ மாதவோ பக்த வத்ஸல:

79. ஸுவர்ண வர்ணோ ஹேமாங்கோ வராங்கஸ் சந்தநாங் கதீ
வீரஹா விஷமஸ் ஸுந்யோ த்ருதாஸீரஸ் சலஸ்சல:

80. அமாநீ மாநதோ மாந்யோ லோகஸ்வாமீ த்ரிலோக த்ருத்
சுமேதா மேதஜோ தந்யஸ் ஸத்ய மேதா தராதர:

81. தேஜோ வ்ருஷா த்யுதி தரஸ் ஸர்வ ஸஸ்த்ர ப்ருதாம் வர:
ப்ரக்ரஹோ நிக்ரஹோ வ்யக்ரோ நைக ஸ்ருங்கோ கதாக்ரஜ

82. சதுர் மூர்த்திஸ் சதுர் பாஹுஸ் சதுர் வ்யூஹஸ் சதுர் கதி:
சதுராத்மா சதுர் பாவஸ் சதுர் வேத விதேகபாத்

83. ஸமா வர்த்தோ நிவ்ருத் தாத்மா துர்ஜயோ துரதி க்ரம:
துர்லபோ துர்கமோ துர்கோ துரா வாஸோ துராரிஹா

84. சுபாங்கோ லோக ஸாரங்க: சுதந்துஸ் தந்து வாத்தந:
இந்த்ர கர்மா மஹா கர்மா க்ருத கர்மா க்ருதாகம:

85. உத்பவஸ் சுந்தரஸ் சுந்தோ ரத்ந நாபஸ் சுலோசந:
அர்க்கோ வாஜஸநஸ் ஸ்ருங்கீ ஜயந்தஸ் ஸர்வ விஜ்ஜயீ

86. சுவர்ண பிந்து ரக்ஷப்யஸ் ஸர்வ வாகீஸ் வரேஸ்வர:
மஹா ஹ்ரதோ மஹா கர்த்தோ மஹா பூதோ மஹாநிதி:

87. குமுத : குந்தர : குந்த : பர்ஜந்ய : பாவநோ நில :
அம்ருதாஸோ அம்ருத வபுஸ் ஸர்வஜ்ஞஸ் ஸர்வதோ முக :

88. கலபஸ் சுவ்ரதஸ் ஸித்தஸ் ஸத்ருஜிச் சத்ரு தாபந:
ந்யக்ரோதோ தும்பரோ அஸ்வத்தஸ் சாணூராந்த்ர நிஷூதந:

89. ஸஹஸ்ரார்ச்சிஸ் ஸப்த ஜிஹ்வஸ் ஸப்தைதாஸ் ஸப்த வாஹந:
அமூர்த்தி ரநகோ அசிந்த்யோ : ப்ராக்வம்ஸோ வம்ஸவர்த்தந:

90. அணுர்ப்ருஹத் க்ருஸஸ் ஸ்தூலோ குணப்ருந்நிர் குணோ மஹாந்
அத்ருதஸ் ஸ்வத்ருதஸ் ஸ்வாஸ்ய: ப்ராக்வம்ஸோ வம்ஸவர்த்தந:

91. பாரப்ருத் கதிதோ யோகீ யோகீஸஸ் ஸர்வ காமத:
ஆஸ்ரமஸ் ஸ்ரமண: க்ஷமஸ் சுபர்ணோ வாயு வாஹந:

92. தநுர்த் தரோ தநுர் வேதோ தண்டோ தமயிதா அதம:
அபராஜிதஸ் ஸர்வ ஸஹோ நியந்தா நியமோயம:

93. ஸத்வவாந் ஸாத்விகஸ் ஸத்யஸ் ஸத்ய தர்ம பராயண:
அபிப்ராய : ப்ரியார்ஹோஹ ப்ரியக்ருத் ப்ரீதி வர்த்தந:

94. விஹாய ஸகதிர் ஜ்யோதிஸ் சுருசிர் ஹுதபுக் விபு:
ரவிர் விரோசநஸ் ஸூர்யஸ் ஸவிதா ரவி லோசந:

95. அநந்தோ ஹுதபுக் போக்தா சுகதோ நைகதோ அக்ரஜ:
அநிர் விண்ணஸ் ஸதா மர்ஷீ லோகாதிஷ்டாந மத்புத:

96. ஸநாத் ஸநாதந தம: கபில : கபிரவ்யய :
ஸ்வஸ்திதஸ் ஸ்வஸ்திக்ருத் ஸ்வஸ்தி ஸ்வஸ்திபுக் ஸ்வஸ்தி தக்ஷிண:

97. அரௌத்ர : குண்டலீ சக்ரீ விக்ரம் யூர்ஜித ஸாஸந:
ஸப்தாதிகஸ் ஸப்த ஸஹ : ஸிஸிரஸ் ஸர்வரீ கர:

98. அக்ரூர: பேஸலோ தக்ஷ தக்ஷிண க்ஷமிணாம் வர:
வித்வத்தமோ வீதபய: புண்ய ஸ்வரண கீர்த்தந:

99. உத்தாரணோ துஷ் க்ருதிஹா புண்யோ துஸ்வப்ந நாஸந:
வீரஹா ரக்ஷணஸ் ஸந்தோ ஜீவந: பர்ய வஸ்தித:

100. அநந்த ருபோ அநந்தஸ்ரீ: ஜிதமந்யுர் பயாபஹ:
சதுரஸ்ரோ கபீராத்மா விதிஸோ வ்யாதிஸோ திஸ:

101. அநாதிர் பூர்புவோ லக்ஷ்மீஸ் சுவீரோ ருசிராங்கத:
ஜநநோ ஜந ஜந்மாதிர் பீமோ பீம பராக்ரம:

102. ஆதார நிலயோ தாதா புஷ்ப ஹாஸ: ப்ரஜாகர:
ஊர்த்வகஸ் ஸத்பதாசார: ப்ராணத: ப்ரணவ: பண:

103. ப்ரமாணம் ப்ராண நிலய: ப்ராண த்ருத் ப்ராண ஜீவந:
தத்வம் தத்வ விதேகாத்மா ஜந்ம ம்ருத்யு ஜராதிக:

104. பூர்புவ: ஸ்வஸ்த ருஸ்தாரஸ் ஸவிதா ப்ரபிதா மஹ:
யஜ்ஞோ யஜ்ஞபதிர் யஜ்வா யஜ்ஞாங்கோ யஞ்ஞ வாஹந:

105. யஜ்ஞ ப்ருத் யஜ்ஞ க்ருத் யஜ்ஞி யஜ்ஞ புக் யஜ்ஞ ஸாத ந:
யஜ்ஞாந்த க்ருத் யஜ்ஞ குஹ்யம் அந்ந மந்நாத ஏவ ச

106. ஆத்ம யோநிஸ் ஸ்வயஞ் ஜாதோ வைகாநஸ் ஸாம காயந:
தேவகீ நந்தநஸ் ஸ்ரஷ்டா க்ஷிதீஸ: பாப நாஸந:

107. ஸங்கப்ருந் நந்தகீ சக்ரீ ஸார்ங்க தந்வா கதாதர:
ரதாங்க பாணி ரக்ஷப்யஸ் ஸர்வ ப்ரஹரணாயுத:
ஸ்ரீ ஸர்வ ப்ரஹரணாயுத ஓம் நம இதி

(வநமாலீ கதீ ஸார்ங்கீ ஸங்கீ சக்ரீ ச நந்தகீ
ஸ்ரீமாந் நாரயணோ விஷ்ணுர் வாசுதேவோ அபிரக்ஷது)

பலஸ்ருதி 

இதீதம் கீர்த்த நீயஸ்ய கேஸவஸ்ய மஹாத்மந:
நாம் நாம் ஸஹஸ்ரம் திவ்யாநாம் அஸேஷேண ப்ரகீர்த்திதம்

ய இதம் ஸ்ருணுயாந் நித்யம் யஸ்சாபி பரி கீர்த்தயேத்
நாசுபம் ப்ராப்நுயாத் கிஞ்சித் ஸோஅமுத்ரேஹ ச மாநவ:

வேதாந்தகோ ப்ராஹ்மணஸ் ஸ்யாத் க்ஷத்ரியோ விஜயீ பவேத்
வைஸ்யோ தநஸம்ருத்தஸ் ஸ்யாத் ஸுத்ரஸ் சுக மவாப்நுயாத்

தர்மார்த்தீ ப்ராப்நுயாத் தர்மம் அர்த்தார்த்தீ சார்த்த மாப்நுயாத்
காமா நவாப் நுயாத் காமீ ப்ரஜார்தீ ப்ராப்நுயாத் ப்ரஜா:

பக்திமாந் யஸ் ஸதோத்தாய சுசிஸ் தத்கத மாநஸ:
ஸஹஸ்ரம் வாசுதேவஸ்ய நாம்நா மேதத் ப்ரகீர்த்தயேத்

யஸ: ப்ராப்நோதி விபுலம் யாதி ப்ராதாந்ய மேவ ச
அசலாம் ஸ்ரிய மாப்நோதி ஸ்ரேய: ப்ராப்நோத் யநுத்தமம்

ந பயம் க்வசி தாப்நோதி வீர்யம் தேஜஸ்ச விந்ததி
பவத்ய ரோகோ த்யுதிமாந் பலரூப குணாந்வித:

ரோகார்த்தோ முச்யதே ரோகாத் பத்தோ முச்யேத பந்தநாத்
பயாந் முச்யேத பீதஸ்து முச்யே தாபந்ந ஆபத:

துர்காண் யதிதரத்யாசு புருஷ : புருஷாத்தமம்
ஸ்துவந் நாம ஸஹஸ்ரேண நித்யம் பக்தி ஸமந்வித:

வாஸுதேவா ஸ்ரயோ மர்த்யோ வாஸுதேவ பராயண:
ஸர்வ பாப விசுத் தாத்மா யாதி ப்ரஹ்ம ஸநாதநம்:

ந வாஸுதேவ பக்தாநாம் அசுபம் வித்யதே க்வசித்
ஜந்ம ம்ருத்யு ஜரா வ்யாதி பயம் நைவோப ஜாயதே

இமம் ஸ்தவ மதீயாந: ஸ்ரத்தா பக்தி ஸமந்வித:
யுஜ்யே தாத்ம ஸுகக்ஷந்தி ஸ்ரீ த்ருதி ஸ்ம்ருதி கீர்த்திபி:

ந க்ரோதோ ந ச மாத்ஸர்யம் ந லோபோ நாசுபா மதி:
பவந்தி க்ருத புண்யாநாம் பக்தாநாம் புருஷாத்தமே

த்யௌஸ் ஸசந்த்ரார்க்க நக்ஷத்ரா கம் திஸோ பூர் மஹோததி
வாஸுதேவஸ்ய வீர்யேண வித்ருதாநி மஹாத்மந:

ஸசுராசு ரகந்தர்வம் ஸயக்ஷரக ராக்ஷஸம்
ஜகத் வஸே வர்த்ததேதம் க்ருஷ்ணஸ்ய ஸசராசரம்

இந்த்ரியாணி மநோ புத்திஸ் ஸத்வம் தேஜோ பலம் த்ருதி:
வாஸுதேவாத் மகாந்யாஹு : க்ஷத்ரம் க்ஷத்ரஜ்ஞ ஏவ ச

ஸர்வா கமாநாமாசார : ப்ரதமம் பரிகல்பதே :
ஆசார ப்ரதமோ தர்மோ தர்மஸ்ய ப்ரபுரச்யுத :

ரிஷய : பிதரோ தேவா மஹா பூதாநி தாதவ :
ஜங்கமா ஜங்கமஞ் சேதம் ஜகந் நாராயணோத்பவம்

யோகோ ஞாநம் ததா ஸாங்க்யம் வித்யாஸ் ஸில்பாதிகர்ம ச
வேதாஸ் ஸாஸ்த்ராணி விஞ்ஞாநம் ஏதத் ஸர்வம் ஜநார்தநாத்

ஏகோ விஷணுர் மஹத்பூதம் ப்ருதக் பூதாந் யநேகஸ:
த்ரீந் லோகாந் வ்யாப்ய பூதாத்மா புங்க்தே விஸ்வ புகவ்யய:

இமம் ஸ்தவம் பகவதோ விஷ்ணோர் வ்யாஸேந கீர்த்திதம்
படேத்ய இச்சேத் புருஷ : ஸ்ரேய : ப்ராப்தும் சுகாநி ச

விஸ்வேஸ்வர மஜம் தேவம் ஜகத : ப்ரபுமவ்யயம்
பஜந்தி யே புஷ்கராக்ஷம் ந தே யாந்தி பராபவம்


ந தே யாந்தி பராபவம் ஓம் நம இதி

அர்ஜுந உவாச -

பத்மபத்ர விஸாலாக்ஷ பத்மநாப ஸுரோத்தம
பக்தாநா மநுரக்தாநாம் த்ராதா பவ ஜநார்தந

ஸ்ரீ பகவாநுவாச -

யோ மாம் நாம ஸஹஸ்ரேண ஸ்தோது மிச்சதி பாண்டவ
ஸோஹ மேகேந ஸ்லோகேந ஸ்துத ஏவ ந ஸம்ஸய:
ஸ்துத ஏவ ந ஸம்ஸய ஓம் நம இதி

வ்யாஸ உவாச - 

வாஸாநாத் வாஸுதேவஸ்ய வாஸிதம் புவனத்ரயம்
ஸர்வபூத நிவாஸோ அஸி வாஸுதேவ நமோஸது தே
ஸ்ரீ வாஸுதேவ நாமேஅஸ்து த ஓம் நம இதி

பார்வத்யுவாச -

கேநோ பாயேந லகுநா விஷ்ணோர் நாம ஸஹஸ்ரகம்
பட்யதே பண்டிதைர் நித்யம் ஸ்ரோது மிச்சாம் யஹம் ப்ரபோ


ஈஸ்வர உவாச - 

ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மநோரமே
ஸஹஸ்ரநாம தத்துல்யம் ராமநாம வராநநே
ஸ்ரீ ராமநாம வராநந ஓம் நம இதி

ப்ரஹ்மோவாச - 

நமோஸ்த் வநந்தாய ஸஹஸ்ர மூர்த்தயே
ஸஹஸ்ர பாதா க்ஷிஸிரோரு பாஹவே
ஸஹஸ்ர நாம்நே புருஷாய ஸாஸ்வதே
ஸஹஸ்ர கோடி யுகதாரிணே நம:
ஸ்ரீ ஸஹஸ்ரகோடி யுகதாரிண ஓம் நம இதி

ஸஞ்ஜய உவாச -

யத்ர யோகேஸ்வர : க்ருஷ்ணோ யத்ர பார்த்தோ தநுர்தர:
தத்ர ஸ்ரீர் விஜயோ பூதி : த்ருவா நீதிர் மதிர் மம

ஸ்ரீ பகவாந் உவாச -

அநந்யாஸ் சிந்தயந்தோ மாம் யே ஜநா : பர்யு பாஸதே
தேஷாம் நித்யாபி யுக்தாநாம் யோக க்ஷமம் வஹாம் பஹம்
பரித்ராணாய ஸாதூநாம் விநாஸாய சதுஷ்க்ருதாம்
தர்ம ஸம்ஸ்தாபநார்த்தாய ஸம்பவாமி யுகே யுகே

ஆர்த்தா விஷண்ணாஸ் ஸிதிலாஸ்ச பீதா :
கோரேஷுச வ்யாதிஷு வர்த்தமாநா :
ஸங்கீர்த்ய நாராயண ஸப்த மாத்ரம்
விமுக்த துக்காஸ் சுகிநோ பவந்து

காயேனவாசாமனஸேந்த்ரியைர்வா புத்யாத்மனாவா ப்ரக்ருதே ஸ்வபாவாத்
கரோமி யத்யத் ஸகலம் பரஸ்மை ஸ்ரீமந்நாராயணாயேதி சமர்ப்பயாமி.

Sunday, November 8, 2015

யானைகள் புல் மேயவதில்லை.


சில்லென்று இதமாக வீசிக் கொண்டிருந்த மலைக்காற்றில் ஒரு ஈர வாசனை தெரிந்தது. மழை வருமா ? ஆனாலும் அவன் அண்ணாந்து பார்த்தபோது வானம் நீலமாகவே இருந்தது. அந்த நீல வானத்தில் இருந்து ஒரு சிறிய துண்டை வெட்டி எடுத்து வைத்தது போல அந்த சிறிய ஏரி அவன் எதிரில் தெரிந்தது. அதன் கரையில் இருந்த பாறையின் மீது அவன் வெகு நேரமாக உட்கார்ந்திருக்கிறான்.

அவன்..ரவி என்கிற ரவீந்திரன்.

முப்பதுகளில் இருந்தான். இள வயதிலேயே இராணுவத்தில் சேர்ந்து சில போர்முனைகளையும் கண்டவன். பகைவர்களுக்கு பாரதத்தின் வீரம் என்னவென்று காட்டி அதன் பரிசாக ஒரு பாதத்தை இழந்தவன். கைபர் கணவாய் போல நெற்றியின் ஓரத்திலிருந்து கன்னத்தின் வழியாக காதுக்கு கீழ் வரை ஒரு பள்ளம்....முன்பல்லில் ஒன்றில் பாதி காணாமல் போனதால் பேசும்போது லேசாக காற்றுடன் சொற்கள் கலந்து வரும். ஆனாலும் அவன் கண்ணில் இன்னும் கதிரவன் ஒளி வீசியபடிதான் இருந்தான். நேர் கொண்ட பார்வையும் நிமிர்ந்த நடையும் அவன் மன உறுதிக்கு கட்டியம் சொல்லும்.

பணி செய்ய முடியாத நிலையில் இன்று இராணுவத்தில் இருந்து வெளியேறி விட்டான். வயிற்றுக்கு உணவும் உடல் மறைக்க உடையும் அவனுக்கு என்றும் கிடைத்துவிடும். ஆனால் வாழ்வின் வசந்தங்களை அவன் இதுவரை கண்டதிலை. என்றோ அனாதையானவன் இன்றோ குரூபியானவன். அதனால் அவன் வாழ்வில் துணை வர எந்தப் பெண்ணும் தயாராகவும் இல்லை. உடன் பணியாற்றியதால் அவன் உள்ளத்தைப் புரிந்து கொண்ட நண்பன் சாமிதுரை அவனைத் தன்னுடன் தன் வீட்டுக்கு அழைத்து வந்திருந்தான்.

"எவ்வளவு நாள் வேணுமானாலும் என்னோடு இரு. உனக்கு ஒரு வேலை கிடைப்பது பெரிய விஷயம் இல்லை. அப்புறம் யோசிக்கலாம்". துரையின் அன்பு அழுத்தமாக அவனைப் பிடித்துக் கொள்ள அவன் மனைவியின் பயம் கலந்த முகம் அவனை தர்மசங்கடத்தில் தள்ளியது.

"உங்க ஃப்ரெண்டைக் கொஞ்சம் அவர் ரூம் பக்கமே இருக்கும்படி ஏதாவது சொல்லி வையுங்க. குழந்தை பாத்தாலே பயப்படுது" அவள் கிசுகிசுத்தது ஒரு வேளை ரவிவின் காதில் கேட்டாலும் கேட்கட்டுமே என்று கூட இருந்திருக்கலாம். அம்மா அக்கா தங்கை என்று எந்த அன்பும் அவன் கண்டதில்லை. அதனால் இது போன்ற பேச்சுகள் அவன் காதில் படாமலே போய்விடும்.

ரவி சுற்றுமுற்றும் பார்த்தான். கண்ணுகெட்டிய தொலைவு வரை மரங்களும், புதர்களும் மட்டுமே தெரிந்தன. மேல் வானத்தில் சூரியனை சில கருமேகங்கள் சுற்றி வளைத்து ராகிங் செய்து கொண்டிருக்க, அனுசரணை இல்லாத மனிதர்களாக மலை முகடுகள் அசையாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றன.

காற்றில் லேசாக குளிர் அதிகரிக்க அவன் உடம்பு சிலிர்த்தது. கடிகாரத்தைப் பார்த்து விட்டு சால்வையைப் போர்த்தியபடியே எழுந்து விந்தி விந்தி நடந்தான். ஊனமான காலில் அணிந்திருந்த வட்டமான செருப்பு லேசாக வழுக்க காலை அழுத்தி ஊன்றியபடியே நிமிர்ந்தபோது பொட்டென்று ஒரு நீர்த்துளி அவன் நெற்றியில் விழுந்தது. இலவசப் பொருட்கள் தருவதாகக் கூறும் அறிவிப்பைப் பார்த்ததும் கூடும் மக்கள் போல அதற்குள்ளாக கருமேகங்கள் கூடி வானத்தில் சண்டையிட ஆரம்பித்து இருந்தன. கையில் குடை இல்லை. வீட்டிலிருந்து நிறைய தூரம் வந்து விட்டான் என்பது தெரிந்தது. மழை வலுக்கும் முன் தங்க ஒரு இடம் தேவை.

எங்கும் மரக்கூட்டங்கள்தான்... ஊழித் தாண்டவமாடும் ருத்ரன் போல தலை விரித்து ஆட ஆரம்பித்த மரக்கூட்டங்களின் நடுவில் அந்த சிறிய வீடு தெரிந்தது. உள்ளே தெரிந்த விளக்கின் ஒளி இதமாக மனதில் ஒரு வெப்பத்தைக் கிளப்ப அவன் மெல்ல மெல்ல அந்த வீட்டை நோக்கி நடந்தான். பூமியை செழிப்பாக்க வருகிறோம் என்று மேகங்கள் விடும் செய்தியைத் தாங்கி வரும் தந்திக் கம்பிகளாக மழை ஆரம்பித்தபோது ரவி அந்த வீட்டின் வாசல் கதவைத் தட்டினான்.

கதவு திறந்ததும் தெரிந்தது அந்த முகம். அன்பின் முலாம் பூசி இருந்தது...

"உள்ளே வாப்பா.. மழை வலுக்குது"

இது வரை அவனைக் கணடதும் முகம் சுளிக்காமல் வரவேற்றது இவள் மட்டும்தானோ ?

அவன் உள்ளே வந்தபோது "அங்க்கிள் அங்க்கிள்" என்றபடி ஒரு சின்னப்பயல் .. இல்லை.. சின்னப்புயல் அவன் மீது பாய "டேய் பாபு.. அங்க்கிளை தொந்தரவு செய்யாதே" என்றபடி பாபுவை நகர்த்தி விட்டு "நீ உட்காருப்பா" என்றாள். ஒரே ஒரு சிறிய அறை. அதை ஒட்டியபடி இருந்த இன்னொரு அறை சமையலறை எனவும், ஓரமாகத் தெரிந்த கதவு டாய்லெட் என்றும் புரிந்தது.

"பரவாயில்லைங்க சின்னப் பையன்தானே ! " அவனுக்குள் துரையின் மகனுடைய பயந்த முகம் தோன்றி மறைந்தது.

"என் பேரு ரவீந்திரன். நான் சில்வர் எஸ்டேட் குவாட்டர்ஸில் என் நண்பனோடு தங்கி இருக்கேன். இங்கே இந்த ஏரிக்கு வாக்கிங் வந்தேன்.திடீர்னு மழை வந்திருச்சு. அதான்.."

"இந்த ஏரிப்பக்கமெல்லாம் டூரிஸ்ட்கள் கூட யாரும் வர்ரதில்லை. அதனால் சரியான பாதையும் இல்லை." என்றவள் அவன் காலைக் கவனித்து "கண்ணி வெடியா?" என்றாள்.

"ஆமா..எப்படி சரியா...... ?"

அவள் கையை நீட்டிய திசையில் பார்த்தபோது மிலிடரி உடை அணிந்த ஒருவரின் படத்துக்கு சந்தன மாலை அணிவிக்கப்பட்டு இருந்தது.

"என் வீட்டுக்காரர். எப்பவும் நாடு நாடுன்னே சொல்லுவார். மிலிடரிக்காரங்க எல்லாரும் யானை போலன்னு சொல்லுவார். எப்பவும் உயர்ந்த லட்சியத்தோடதான் வாழணும். யானை எப்பவுமே ஒசந்த மரக்கிளையை ஒடிச்சு திங்குமே தவிர தரையில் இருக்குற புல்லைத் தின்னாது. நாங்க அவர் சொன்னதை தட்டுனதே இல்லை. மிலிடரிக்காரங்கன்னா அவருக்கு உசிரு. நாட்டுக்கு உழைக்கிறவங்களுக்கு என்ன வேணுமானலும் செய்யலாம்னு சொல்லுவாரு"

பாபு அவன் மடியில் ஏறி உட்கார்ந்து கொண்டான். ரவிவின் மனதில் ஒரு நதி ஓட ஆரம்பித்தது. ஆண்ட்டியுடன் பேசிக்கொண்டே நேரம் நகர நகர வெளியே மழைத்தாரைகள் இருளுடன் கூடி திரை போட்டு உலகத்தை மூடியிருந்தன. பேச்சு வாக்கில் ரவி அவனையும் அறியாமல் அவ்னைப் பற்றிய விவரங்களைச் சொல்ல ஆண்ட்டியின் முகத்தில் ஒரு பனி மூட்டம்.

"எப்படிப்பா இத்தனை கஷ்டங்களையும் தாங்கிக்கிட்டு இருக்கே ? எங்க வீட்டுக்காரர் சொன்னது போல நீங்க எல்லாருமே யானைங்கதான். எங்களைப் பாரு..எங்களுக்கும் வேறு சொந்தம் யாரும் இல்லை. ஆனா எனக்கு பாபுவும் அவனுக்கு நானுமாய் இருக்கிறோம்."

"இந்த இடத்தில் தனியா..."

அவள் சிரித்தாள்.

"இயற்கைக்கு எதிராகத்தான் போராட முடியாது. மனிதர்கள் கிட்டே இருந்து என்னைக் காப்பாத்திக் கொள்ள எனக்கு சக்தி இருக்குதுப்பா"

மழை விடுவதாகத் தெரியவில்லை.

"இன்னைக்கு ராத்திரி இங்கேயே தங்கிட்டு காலையில் ம்ழை விட்டதும் கிளம்பலாமே"

பேய் மழையால் நகர முடியாமல் போக ரவி துரைக்கு ஃபோன் செய்து விவரம் சொன்னான். காலையில் மழை விட்டதும் வருவதாக் சொன்னான். அன்று இரவு ஆண்ட்டி கொடுத்த அவள் கணவரின் லுங்கியைக் கட்டிக்கொண்டு சூடான சப்பாத்தியை சாப்பிட்டு விட்டு உட்கார்ந்திருந்தபோது ஆண்ட்டி அவனுக்கு எதிரில் வந்து உட்கார்ந்து கொண்டாள். பாபு கையில் ஒரு புத்தகத்தை வைத்துக் கொண்டு அவன் மடியில் சாய்ந்தபடி தூங்கிப் போயிருந்தான்.

"உன் கிட்டே நல்லா ஒட்டிக்கிட்டான் போலிருக்கு"

"ஆமாம் ஆண்ட்டி"

"அவனுக்கு அன்பு காட்ட என்னை விட்டால் யாரு இருக்காங்க.. அதான் பள்ளம் கண்டதும் பாயுற தண்ணி போல பாயுறான்" ஆண்ட்டி ஜன்னல் இடுக்கு வழியாகத் தெரிந்த மின்னலைப் பார்த்தபடி சொன்னாள்.

"அவர் போன பிறகு இந்த வீடும் என் நகைகளும்தான் மிச்சம். நான் எஸ்டேட்டில் வேலை பார்த்து எங்களைக் காப்பாற்றி கொள்கிறேன்"

அவனும் மழையைப் பார்த்தபடியே சொன்னான்.

"ராணுவத்தில் வேலை பார்த்திருந்தாலும் பணம் சேர்க்கத் தோணலை. அதனால்தான் கிடைச்ச வேலைக்கு கூட டெபாசிட் கட்ட என் நண்பனைத்தான் எதிர்பார்த்திருக்கிறேன்"

அவள் பேசவில்லை.

காலையில் கண்விழித்தபோது அவள் சூடான டீயுடன் இருக்க பாபு கீழே விழுந்திருந்த மரக்கிளைகளில் இருந்த பூமொட்டுக்களைப் பறித்துக் கொண்டு இருந்தான்.

"வெளியே நிக்காதே பாபு... மரமெல்லாம் சாய்ஞ்சிருக்குது பாரு" அவள் பாபுவை அழைத்தாள்.

"என்னப்பா நல்ல தூக்கம் வந்துச்சா ? " என்று கேட்டபடி டீ கிண்ணத்தை எடுத்துக் கொண்டு போனாள்.

"போய்விட்டு அப்புறமாக வரேன் அக்கா. என் விலாசம் எழுதி வச்சிருக்கேன் அக்கா... நான் அப்படி கூப்பிடலாமில்லையா ?".

"தாராளமா.. என் வீட்டுக்காரர் போல நீயும் ஒரு யானைதானே ! அதனாலே இனிமேல் நீயும் எங்க சொந்தம்தான். போகும்போது இதை எடுத்துக்கிட்டு போப்பா" என்று ஒரு பொட்டலத்தைக் கொடுத்தாள். ஏதேனும் பலகாரமாக இருக்கும்.

இது வரை அவனிடம் யாரும் காட்டாத அன்பை அந்த ஏழைத் தாயிடம் அவன் கண்டான். மிலிடரிக்காரர்கள் மட்டுமல்ல. அவர்களை அறிந்தவர்களும் யானைகள்தானோ ? பாபு அவனைக் கட்டிக்கொண்டு போக விடாமல் அடம் பிடிக்க அந்த ஆண்ட்டி அவனைப் பிரித்து அழைத்துக் கொண்டு சென்றபோது அவனுக்குள் ஏதோ சோகம் தோன்றியது. யாரும் இல்லாத தனி மரம் தான் மட்டுமல்ல என்றும் தோன்றியது.

வானம் இன்னும் மூட்டமாகவே இருந்தது. அவன் துரையின் வீட்டுக்கு வந்தபோது மீண்டும் ஒரு பெருமழை பிடித்தது. காற்றோடு மழையும் சேர்ந்து வெறி பிடித்தது போல ஆடி முடித்தபோது அவன் பிரித்துப் பார்த்த பொட்டலத்தில் அவன் கட்ட வேண்டிய டிபாசிட் பணம் இருந்தது..அவன் பிரமித்திருந்தான். ஆனாலும் அதைத் திரும்பக் கொடுத்துவிடத் தீர்மானித்தான்.

அன்று மதியம் ......

ரவி ஏற்கனவே நேர்முகத்தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த ஒரு பெரிய கம்பெனியின் அவனை உடனே சென்னைக் கிளையில் சேரும்படி செய்தி வந்தது. தங்கும் இடமும் அவர்க்ளே தருவதாகவும் குறிப்பிடப்பட்டு இருந்தது. டிபாசிட் எதுவும் கட்ட வேண்டியதும் இல்லை.

"கங்கிராஜுலேஷன்ஸ் ரவி" என்று துரை அவனை அணைத்துக் கொண்டான். "இனிமேல் உனக்கு ஒரு குறையும் இல்லை"

"உன்னைப் போல ஒரு நண்பன் இருக்கும்போது எனக்கு என்ன குறை? ஒரு சின்ன விஷயம். நான் கொஞ்சம் வெளியே போயிட்டு வரேன் துரை" மனம் முழுவதும் பிரகாசமாக அவன் கிளம்பினான்.

அந்த மரக்கூட்டத்துக்கு அருகே வந்தபோது ஒரு வேறுபாடு தெரிந்தது. காற்றில் அங்கங்கே மரங்கள் விழுந்து கிடக்க மனிதக்கூட்டமும் இருந்தது. அந்த வீடு இருந்த இடத்தில் ஒரு பெரிய மரத்தின் கிளைகள் தெரிந்தன. அவன் விந்தி ஓடினான்.

"என்ன ஆச்சு?"

"நேத்து ராத்திரி மழையிலேயே அந்த மரமெல்லாம் சாய ஆரம்பிச்சிருந்துச்சு. காலையிலே மறுபடி அடிச்ச காத்துல அந்த மரம் அந்த மிலிடரிக்காரன் வீட்டு மேலே விழுந்திருச்சு. வாசலில் இருந்த அவரு சம்சாரம் அடிபட்டு அப்போதே இறந்துட்டாங்க. அந்தப் பையன் மட்டும் உள்ளே இருந்திருக்கான். அதனால தப்பிச்சுட்டான். அவங்களுக்கு உறவுக்காரங்க வேற யாரும் இல்லை., பாவம் அந்த புள்ளை நிலைமை"

ரவி வேகமாக முன்னேறினான். சிதறிக் கிடந்த கிளைகளுக்கும், இலைகளுக்கும் நடுவில் ஒரு சின்ன உருவம் தெரிந்தது. அதை நோக்கி முன்னேறியவனை ஒரு போலீஸ் உருவம் தடுத்தது.

"அங்கிள்" ஒரு விம்மலுடன் பாபு அவனிடம் ஓடி வர அவனைக் கைகளில் ஏந்திக் கொண்டான்.

"அழக்கூடாது பாபு... அங்க்கிள் இருக்கேனில்ல"

அவன் தன்னுடன் ஒட்டிக் கொண்ட பாபுவைத் தூக்கிக் கொண்டு அவர்கள் பின்னே போனான்.

"நீங்க சொந்தக்காரவுங்களா ? அப்போ இப்படி வாங்க". ஒரு போலீஸ் முகம் அழைத்தது.

பிறகு..

"சார்.. இப்போதைக்கு இந்தப் பையனுக்கு உங்களைத் தவிர தெரிஞ்ச மாதிரி சொந்தம் யாருமில்லே. நீங்க சம்மதிச்சா உங்க கூட கூட்டிகிட்டு போகலாம். மத்த விஷயங்களை அப்புறமா பார்த்துக்கலாம். உங்களுக்கு விருப்பம் இல்லாட்டி இவனை ஏதாச்சும் அனாதை இல்லத்தில் சேர்த்துடுறோம்."

"வேணம் சார். நான் என் கூட அழைச்சுகிட்டு போறேன். தேவைப்படும்போது கூப்பிடுங்க வரேன்"

அவன் மனதில் பாபுவின் அம்மா சொன்னது நினைவுக்கு வந்தது. யானைகள் என்றுமே உயர்ந்த மரக்கிளைகளைக் கொண்டே தங்கள் பசியைத் தீர்த்துக் கொள்ளும். நம் சிந்தனையும் என்றும் உயர்வாகவே இருக்கட்டும். ஒரு ராணுவ வீரன் எதற்கும் கலங்காமல் முன்னேற வேண்டும். ரவிவின் முகமும் மனமும் இப்பொது தெளிவாக இருந்தன. அவனுக்கு என்று இப்போது ஒரு பிடிப்பு இருந்தது.

எல்லாம் முடிந்து அவன் பாபுவின் கையைப் பிடித்துக் கொண்டு கிளம்பியபோது அவன் நடையில் தடுமாற்றம் இல்லை. ஏனென்றால்...

யானைகள் புல் மேயவதில்லை.