Tuesday, October 25, 2011

பக்த மீரா படத்தில் திருமதி எம்.எஸ், அம்மா அவர்கள் பாடிய இந்தப் பாடல் அனேகமாக எந்த இசைத் தட்டுகளிலும் இடம் பெறவில்லை. இந்தப் பாடல் காட்சியில்தான் திரு எம்.ஜி.ஆர் அவர்களும் இடம் பெற்றிருக்கிறார் என்பது இன்னொரு சேதி.

பக்தியில் கனிந்து உருக இது ஒரு வாய்ப்பு. அதை நழுவவிடலாமா ?

http://music2.cooltoad.com/music/song.php?id=532520

சராசரம் உன்னை யாவும் தேடுமே...
மறைகளும் மகிழ்ந்து உன்னைப் பாடுமே....ஹே ப்ரபோ !
நிராசையால் நைந்த என் நெஞ்சமும்
பராவும் உன் பாதாரவிந்தமே !

உன்னையே எனதுயிர் துணை என்று
உவந்ததென் தவறோ ஐயா !
கனவிலும் உன்னை அன்றி நினைவுண்டோ
கதி உன் கழலின் நிழலே அன்றோ !
வானகம் வையகம் தரும் இன்பங்களைக்
கருதியதும் உண்டா?
இரங்குவதறிந்திலையா ? மறந்திடலாகாதையா !

இரவெலாம் கண்ணில் நீர் அருவி பெருகும் !
அனலில் மெழுகென அகமும் உருகும் !
"ஹரி ஹரீ" என நாவும் கதறும் !
இதயமும் பதறும் ஐயா !

பாத மலரில் படிந்திடும் வண்டாய்
நாதனே உன் இசை பாடுவேன் கண்டாய் !
அடியாள் மீரா அன்றும் இன்றும் உன்
அடைக்கலம் ஐயா !

Friday, October 21, 2011

சப்த விடங்க ஸ்தலங்கள்

"டங்கம்" என்றால் வடமொழியில் உளி என்று பொருள் படும். விடங்கம் என்றால் உளியால் செதுக்கப்படாதது என்று அர்த்தம். அது போல உளியால் செதுக்கப் படாத மூர்த்தங்கள் அமையப் பெற்ற தலங்கள் விடங்கத் தலங்கள் என்று அழைக்கப் பெறும்.

1. திருவாரூர் - வீதிவிடங்கர் - அஜபா நடனம்

2. திருநாகைக்காரோணம் எனும் நாகப்பட்டினம்- சுந்தரவிடங்கர் - வீசி நடனம்

3. திருநள்ளாறு - நகரவிடங்கர் - உன்மத்த நடனம்

4. திருக்காறாயில் என்கிற திருக்காரவாசல் - ஆதிவிடங்கர் - குக்குட நடனம்

5. திருக்கோளிலி என்கிற திருக்குவைள - அவனிவிடங்கர் - பிருங்க நடனம்

6. திருவாய்மூர் - நீல விடங்கர் - கமல நடனம்

7. திருமறைக்காடு எனும் வேதாரண்யம்- புவனி விடங்கர் - ஹம்சபாத நடனம

பஞ்ச தாண்டவங்கள்

சிவபிரானின் ஐந்து தாண்டவங்களாக கூறப்படுவன.

1. சிதம்பரம் - ஆனந்த தாண்டவம்

2. திருவாரூர் - அஜபா தாண்டவம்

3. மதுரை - ஞானசுந்தர தாண்டவம்

4. அவிநாசி - ஊர்த்வ தாண்டவம்

5. திருமுருகன்பூண்டி - பிரும்ம தாண்டவம்

பஞ்ச சபைகள்

சிவபெருமான் நடனமாடும் சபைகள் பல க்ஷேத்திரங்களிலும் உண்டு என்றாலும் அவற்றில் சிறப்பாக கூறப்படுபவை ஐந்து சபைகள்.

அவையாவன..

1. கனகசபை - திருச்சிற்றம்பலம் என்று போற்றப்படும் சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் ஆலயம்

2. ரஜத்சபை - வெள்ளியம்பலம் என்று அழைக்கபடும் கால் மாறி ஆடிய கோலத்தில் பெருமான் காட்சி தரும் மதுரை ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் ஆலயம்

3. தாமிரசபை - திருநெல்வேலி ஸ்ரீ காந்திமதி அம்பாள் சமேத ஸ்ரீ நெல்லையப்பர் ஆலயம்

4. சித்திர சபை - அருள்மிகு குற்றால நாதர் திருக்கோவில் அருகே ஐந்தருவி செல்லும் பாதையில் உள்ளது

5. இரத்தின சபை - ஸ்ரீ வடவாரண்யேஸ்வரர் ஆலயம், திருவாலங்காடு.

பஞ்ச பூத க்ஷேத்திரங்கள்

ப்ருத்வி - பூமி - அருள்மிகு வன்மீக நாதர் திருக்கோவில், திருவாரூர் / அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவில், காஞ்சிபுரம்

அப்பு - நீர் - அருள்மிகு ஜம்புகேஸ்வரர் திருக்கோவில், திருவானைக்காவல்

வாயு - காற்று - அருள்மிகு காளஹஸ்தீஸ்வரர் திருக்கோவில், ஸ்ரீகாளஹஸ்தி

தேயு - அக்னி - அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோவில், திருவண்ணாமலை

ஆகாசம் - வானம் - அருள்மிகு நடராஜப் பெருமான் கோவில், சிதம்பரம்

கிழமையும் தானங்களும்

ஒவ்வொரு கிழமையிலும் செய்ய வேண்டிய தானங்கள் எவை எவை என்பது தெரியுமா ?

ஞாயிறு - வெல்லம் அல்லது சர்க்கரையுடன் பருப்பு சேர்த்து செய்யப்பட்ட பாயசம் அல்லது பொங்கல்

திங்கள் - வெள்ளை நிற பண்டங்கள், பால்.

செவ்வாய் - வாழைப்பழம், செவ்வாழை சிறந்தது

புதன் - வெண்ணெய்

வியாழன் - வெல்லச் சர்க்கரை

வெள்ளி - வெள்ளைச் சர்க்கரை

சனி - பசு நெய்

Monday, October 10, 2011

பாட வேண்டும்

பாடியவர் : பித்துக்குளி முருகதாஸ்

ஆசை வேண்டும்.. ஆசை வேண்டும்

பாட வேண்டும் என்ற ஆசை வேண்டும்
பக்க மேளதாளம் ஒன்றும் வராவிட்டாலும்

( பாட வேண்டும் )

ஆடலினால் இந்த அவனியெல்லாம் ஈன்ற
ஆண்டவனை நினைந்து அழுது தொழுதுருகி

( பாட வேண்டும் )

மூட மூட ரோகம் பாடப் பாட ராகம்
முயற்சி செய்தால் இங்கு முற்றுப் பெறாததில்லை
கூட வேண்டும் அன்பர் கூட்டத்து மத்தியிலே
குமரி கன்யாகுமரி அம்மா சரணம் என

( பாட வேண்டும் )

Thursday, October 6, 2011




ஸ்வாமிம்லை ( சூலமங்கலம் சகோதரிகள்) - youtube

ஸ்வாமிமலை எங்கள் ஸ்வாமிமலை
சிவ ஷண்முகனுக்கு ஈடு யாருமில்லை

(ஸ்வாமி மலை)

சப்தங்களின் தொடக்கம் ப்ரணவமாம்
சாரம் தெரியாமல் திகைத்ததனால்
சத்திய லோகத்து ப்ரம்ஹனுமே
சரவணன் கையாலே சிறைப்பட்டான்

(ஸ்வாமி மலை)

சங்கரன் செவியினில் உமை பாலன்
சாற்றும் உபதேசம் ஓம் நாதம்
ஸ்வாமி மலை தகப்பன்சாமி மலை
சன்னிதி வந்தவர்க்கு ஏது குறை ?

(ஸ்வாமி மலை)

swami malai engal swami malai
siva shanmuganukku eedu yaarumillai

(swamimalai)

sapthangaLin thodakkam praNavamaam
sAram theriyAmal thigaithadhanAl
sathiya lOgathu brahmanumey
sarvanan kaiyaaley siRapattaan

(swamimalai)

sankaran seviyinil umai baalan
saatRum upadesam Om nAdham
swami malai thagappansAmi malai
sannidhi vandhavarku yEdhu kuRai

(swamimalai)

ஸ்ரீ சுவாமிநாத ஸ்தோத்ரம்




ஹே ஸ்வாமி நாதார்த்த பந்தோ
பஸ்ம லிப்தாங்க காங்கேய காருண்ய ஸிந்தோ

ருத்ராக்ஷதாரின் நமஸ்தே
ரௌத்ர ரோகம் ஹரத்வம் புராரேர்குரோமே
ராகேந்து வக்த்ரம் பவந்தம்
மாரரூபம் குமாரம் பஜே காமபூரம்

மாம் யாஹி ரோகாதகோராத்
மங்களா பாங்கபாதேன, பங்காத் ஸ்வராணாம்
காலாச்ச துஷ்பாபகூலாத்
காலஸ்ய ஸூனும் பஜே க்ராந்தஸானும்

ப்ரம்ஹாதயோ யஸ்ய ருஷ்யா:
ப்ரம்ஹபுத்ரா: கிரௌ யஸ்ய ஸோபானபூதா:
ஸைன்யம் ஸுராஸ்சாபிஸர்வே
ஸாமவேதாதிகேயம் பஜே கார்த்திகேயம்

காஷாயஸம்வீத காத்ரம்
காம ரோகாதி ஸம்ஹாரி பிக்ஷான்ன பாத்ரம்
காருண்ய ஸம்பூர்ண நேத்ரம்
சக்தி ஹஸ்தம் பவித்ரம் பஜே சம்பு புத்ரம்

ஸ்ரீஸ்வாமி சைலே வஸந்தம்
ஸாது ஸங்கஸ்ய ரோகான் ஸதா ஸம்ஹரந்தம்
ஓங்கார தத்வம் வதந்தம்
சம்பு கர்ணே ஹஸந்தம் பஜே ஹம்ஸி ஸந்தம்