Saturday, September 17, 2011


முழுமுதற்கடவுளாம் கணபதியின் சஹஸ்ரநாமத்தைப் பாராயணம் செய்தால் எல்லா இன்னல்களும் அகன்று நன்மை உண்டாகும். விநாயகப் பெருமானின் அருளால் கோரிய வரங்கள் அனைத்தும் பெறலாம்.

ஆயினும் நேரமின்மை மற்றும் வேறு காரணங்களால் சஹஸ்ரநாமத்தை முழுவதும் பாராயணம் செய்ய முடியாதவர்கள் பின்வரும் ஸ்லோகங்களை மட்டுமாவது படிப்பதால் காரிய ஸித்தி உண்டாகும்.

விக்னங்கள் விலக :
மஹாகணபதிர் புத்தி ப்ரிய: ஷிப்ர ப்ரஸாத த ந :
ருத்ர ப்ரியோ கணாத்யக்ஷ உமாபுத்ரோக நாஸந: ( தினம் பத்து முறை )

தனம் உண்டாக :
தநதான்ய பதிர் தந்யோ தநதோ தரணீ தர:
த்யாநைக ப்ரகடோ த்யேய : த்யாநோ த்யாந பராயண :

No comments: