Wednesday, September 30, 2015

திருத்தலம் அறிவோம்


ஸ்ரீ துர்கா பரமேஸ்வரி ஆலயம் - கட்டீல்
மங்களூர், கர்நாடகா


ஜாபாலி முனிவரின் தவத்துக்கு இரங்கிய பராசக்தி காமதேனுவின் மகளான நந்தினி எனும் பசுவை நேத்ராவதி நதியாக மாறி உலக மக்களின் பஞ்சம் தீர்க்க அனுப்பி வைத்தார்.

பூவுலகில் கொடுமைகள் புரிந்து கொண்டிருந்த அருணாசுரனை வதம் செய்ய எண்ணிய அம்மன் மோகினியாக உருமாறி வர அவளைப் பிடிக்க வத அசுரனிடமிருந்து ஓடி நேத்ராவதி நதியின் நடுவிலிருந்த பாறையில் ஒளிந்தாள்
பாறையைப் பிளந்த அசுரனை அதிலிருந்து வண்டுகள் வெளியாகி சம்ஹாரம் செய்ய உக்ரமான வண்டு உருவிலிருந்த அம்மனுக்கு முனிவர்கள் இளநீர் அபிஷேகம் செய்து சாந்தமாக்கினர். அவர்கள் விருப்பப்படி நதியின் நடுவே துர்கா பரமேஸ்வரி எனும் பெயருடன் கோவில் கொண்டாள் அம்பாள்.
மூல விக்ரகம் லிங்க வடிவில் இருப்பதாகவும் அம்பாள் போல அலங்காரம் செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது நதியின் மடியில் தோன்றியதால் மடி எனப் பொருள்படும் கடில் எனும் வார்த்தை இன்று கட்டீல் என மருவி விளங்குகிறது.
கர்பக்கிரகத்தின் அடியிலும், கோவிலுக்குக் கீழும் நதியின் ப்ரவாகம் செல்வதை உணரலாம். கர்பக்கிரகம் ஈரமாக காணப்படுகிறது. அம்பாளின் பிரசாதமான குங்குமமும் ஈரம் படிந்தே இருக்கும். இங்கே தீர்த்தம், வளையல், சந்தனம், பாக்குப்பூ இவற்றுடன் கர்நாடகாவின் பிரபலமான சங்கராபுரம் குண்டு மல்லிகைப் பூவும் பிரசாதமாக வழங்கப்படுகிறது.
இங்கு அம்மனுக்கு இளநீர் அபிஷேகம் செய்யப்படுகிறது.
இந்தத் தலம் மங்களூரில் இருந்து 29 கி.மீ தூரத்தில் இருக்கிறது.
மங்களூரிலும், கடீலிலும் தங்கும் விடுதிகள் உள்ளன. எல்லா கர்நாடக கோவிலகளைப் போல இங்கும் பகலிலும், முன்னிரவிலும் அன்னதானம் நடைபெறுகிறது.
ஸ்ரீ துர்கா பரமேஸ்வரியே சரணம்.
முகவரி :
ஸ்ரீ துர்கா பரமேஸ்வரி ஆலயம்
கட்டீல், மங்களூர் தாலுகா
தக்ஷிண கர்நாடகா மாவட்டம்
பின்கோடு - 574148
தொலைபேசி : 0824- 2200361/2200591/2200561

No comments: