ஊர் : திருவெண்ணெய் நல்லூர்
ஸ்வாமி : ஸ்ரீ கிருபாபுரீஸ்வரர் ( சுயம்பு லிங்கம்)
அம்பாள் : மங்களாம்பிகை
ஸ்தல விருக்ஷம் : மூங்கில்
தீர்த்தம் : தண்டு தீர்த்தம்
வழி : சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் விழுப்புரத்தைக் கடந்ததும் ஏறக்குறைய 10 கிமீ தொலைவில் அரசூர் எனும் ஊரில் இருந்து வலது புறம் திரும்பினால் 8 கி.மீ தொலைவில் திருவெண்ணெய் நல்லூரை அடையலாம். ( கடலூர்-ப்ண்ருட்டி-திருக்கோவிலூர் சாலை)
இங்கு ஒரு பெருமாள் கோவிலும் உள்ளது.
பித்தா பிறை சூடி பெருமானே அருளாளா
எத்தால் மறவாதே நினைக்கின்றேன் மனத்து உன்னை
வைத்தாய் பெண்ணை தென்பால் வெண்ணை நல்லூர் அருள் துறையுள்
அத்தா உனக்கு ஆளாய் இனி அல்லேன் எனலாமே.
The first thevaram hymn by Sundaramurthy nayanar was sung at Thiruvennainallur temple.
சைவ சமயக் குரவர் நால்வ்ரையும் ஆட்கொண்ட சிவபெருமான் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு வழியில் தன் நிலை உணர வைத்த மகிமையை நினைந்தால் நெஞ்சம் களிப்புறும்.
சீர்காழித் தலத்து ஆலயத்தின் குளக்கரையில் "அம்மே அப்பா" என்று அழுத குழந்தை திருஞானசம்பந்தருக்கு உமையவளின் பாலைக் கொடுத்து "தோடுடைய செவியன்" என தீந்தமிழில் பதிகம் பாட வைத்தார்.
மருள் நீக்கியார் எனப் பிறந்து தருமசேனர் எனும் பெயருடன் சமணராய் வாழ்ந்தவருக்கு வயிற்றில் சூலை எனும் நோய் தந்து அதை நீக்கி சைவ சமயத்தின் அருமையை உணரச் செய்தார்.
திருவாதவூரர் எனும் மாணிக்கவாசக்ருக்கோ குருந்த மரத்தின் அடியமர்ந்து காலைக் கொடுத்து திருவடி சரணம் என தேடிவரவைத்து நரியைப் பரியாக்கி, பரியை நரியாக்கி திருவிளையாடல் புரிந்து அருள் செய்தார்.
நம்பி ஆரூரன் எனும் அடியவர்க்கோ அவர் திருமண நேரத்தில் வந்து அவரது வம்சமே தனக்கு அடிமை என்று காட்டும் ஓலையைக் கொடுத்து தடுத்தாட் கொண்டு கோபத்தில் கூறிய வார்த்தையையே முதல் சொல்லாகக் கொண்டு "பித்தா பிறைசூடி" எனப் பாட வைத்தார்.

No comments:
Post a Comment